திருப்புகழ் : இறவாமற் பிறவாமல்
திருத்தலம் : அவிநாசி
சந்தம்
தனதானத் தனதான தனதானத் - தனதான
வரிகள்
இறவாமற் பிறவாமல் எனையாள்சற் - குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் - தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் - குமரேசா
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் - பெருமாளே.
பதம் பிரித்தது
இறவாமற் பிறவாமல் எனையாள் சற்குருவாகி
பிறவாகி திரமான பெருவாழ்வைத் தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனே சொற் குமரேசா
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் பெருமாளே.
சொற்கள்
1. அறநால் - அறம், பொருள், இன்பம், வீடு
பொருளுரை
இறவாத வரம் தந்தும், மீண்டும் பிறவாத வரம் தந்தும், என்னை ஆண்டருளும் நல்ல குருவாகியும், மற்ற எல்லாத் துணைகள் ஆகியும், நிலையான (ஸ்திரமான) முக்தியாம் மோக்ஷவீட்டை அருள்வாயாக. குறப்பெண் வள்ளியை மணந்தவனே, குகனே, புகழ் வாய்ந்த குமரேசனே, அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் உபதேசிப்பவனே, அவிநாசியில் வீற்றிருக்கும் பெருமாளே.
இந்த பக்கத்தை பகிர!