Music Logo

எளிய திருப்புகழ் பாடல்கள் தொகுப்பு

திருப்புகழ் : செம் கலச

திருத்தலம் : சிதம்பரம்

சந்தம்

தந்ததன - தனதான

தந்ததன - தனதான

வரிகள்

செங்கலச - முலையார்பால்

சிந்தைபல - தடுமாறி

அங்கமிக - மெலியாதே

அன்புருக - அருள்வாயே

செங்கைபிடி - கொடியோனே

செஞ்சொல்தெரி - புலவோனே

மங்கையுமை - தருசேயே

மன்றுள்வளர் - பெருமாளே.

பதம் பிரித்தது

செம் கலச முலையார்பால் சிந்தைபல தடுமாறி

அங்கம் மிக மெலியாதே அன்பு உருக அருள்வாயே

செம் கை பிடி கொடியோனே செம் சொல் தெரி புலவோனே

மங்கை உமை தரு சேயே மன்றுள் வளர் பெருமாளே.

பொருளுரை

செம்புக் குடம் போன்ற மார்பகங்களை உடைய விலைமாதர் மீது மையலால் மனம் பலவாகத் தடுமாறி என்னுடல் மிகவும் மெலிவு அடையாமல், உன் அன்பால் என் உள்ளம் உருகும்படி அருள் செய்வாயாக. சிவந்த கையில் பிடித்துள்ள சேவல் கொடியோனே, சிறந்த சொற்களைத் தெரிந்த புலவனே, மங்கை பார்வதி ஈன்ற குழந்தையே, தில்லைப் பொன்னம்பலத்தினுள் விளங்கும் பெருமாளே.

இந்த பக்கத்தை பகிர!

முகப்பு பக்கம் செல்லவும்